ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் இன்று மலேசியாவிற்கு விஜயம்

கோலாலம்பூர் :

ரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் இன்று (ஜூன் 4) பணிநிமிர்த்தம் மலேசியாவிற்கு விஜயம் செய்கிறார்.

மலேசியாவில் மனித உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சக மலேசியர்கள் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கான புரிதலை வலுப்படுத்தவும் ஐ.நாவுடன் மலேசியாவின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பின் சான்றாக இந்தப்பயணம் அமையும் என வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, வோல்கர் துர்க்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சந்திப்பார், அத்தோடு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் மற்றும் அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்களுடனும் அவர் சந்திப்புகளை நடத்த உள்ளார்.

மேலும், அவர் மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகம்) மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்திப்பார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here