ரஷியாவில் சோகம்: ஆற்றில் மூழ்கி இந்திய மாணவர்கள் 4 பேர் பலி

ரஷியாவில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ரஷிய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

விசாரணையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் அனந்தராவ் டேசலே, ஜிஷான் அஷ்பக் பின்ஜரி, ஜியா பிரோஜ் பின்ஜரி மற்றும் மாலிக் குல்ம்கோஸ் முகம்மது யாகூப் ஆகிய 4 மாணவர்களும் ரஷியாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதகரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். அவர்களைப் பிரிந்துள்ள குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவியையும் வழங்குவோம். பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here