மலாக்கா, கம்போங் இந்தியா ஜாசின், தேவி ஸ்ரீ கரு மகா காளியம்மன் வருடாந்திர திருவிழா

நமது நிருபர்: ரெ.மாலினி 

மலாக்கா, ஜாசின் 16 ½ மைல், கம்போங் இந்தியாவில் அருள்பாலித்து வரும் தேவி ஸ்ரீ கரு மஹா காளியம்மன் ஆலயத்தின் 51ஆம் ஆண்டு திருவிழா எதிர்வரும் 22 & 23 ஜூன் 2024, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.கலியுக அன்னையாக பக்தர்களின் இன்னல்களை நீக்கி இன்பத்தை அள்ளி தரும் கண் கண்ட தெய்வமாக இவள் இங்கு விற்றிருக்கிறாள்.

மனம் உருகி இவ்வாலயத்திற்கு வந்து வணங்கிச் செல்லும் பக்தர்களின் இன்னல்கள் உடனயாக நிவர்த்திப் பெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது.

இவ்லாயத்திற்கு வரும் பக்தர்களின், குடும்பப் பிரச்சனை, தொழில், வீழ்ச்சி, , நோய், பிணி , மாந்திரீக சிக்கல்கள் அனைத்தும் நீக்கி அருள் புரியும் வல்லமை பொருந்திய மகா காளியாக இந்த தாய் திகழ்கிறாள்.

ஆலயத்தின் தலைவரும் , காளி உபாசகருமான க. மகாலிங்கம் அவர்கள் முத்துப் போட்டு அருள் வாக்கு சொல்வதின் வழி பக்தர்களின் குறைகள் நீக்கப்பட்டு வருகிறது. பிரச்சனைகளுடன் வருபவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அன்று ஆலயப் பிரகாரத்தை தீச்சட்டி ஏந்தி சுற்றி வந்து தங்கள் மனக்குமுறல்களை கரு மகா காளியிடம் முறையீட்டு வேண்டுக் கொள்வது இவ்வாலயத்தில் தொன்று தொட்டு செயல்பட்டு வரும் சிறப்பு பூஜையாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள் அதிகரித்து வருவதாகவும், வேண்டி எடுக்கப்படும் தீச்சட்டி பிரார்த்தனை அடுத்த அமாவாசைக்குள் தீர்வு கண்டு விடும் என நம்பபடுகிறது.

ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பிர்த்தியேகமாக நடைபெறவுள்ளது. 21.06.2024 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு முகூர்த்த கால் ஊன்றுதல், ஹோமம் நடைபெறும்.

22.06.2024 சனிக்கிழமை மாலை 4.30 க்கு விக்னேஸ்வர ஹோமம் , இரவு 7.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பலி பூஜைக்குப் பின் இரவு 9.30 மணிக்கு அபிஷேக ஆராதனை பால் குடம்,காவடி, மற்றும் நேர்த்தி கடன் செலுத்தும் வைபவம் ஆற்றங்கரையிலிருந்து இரத ஊர்வலகத்துடன் இனிதே தொடங்கும்.

திருவிழா அன்று 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆலய நித்தய பூஜைகள் தொடங்கி, காலை 10..00 மணிக்கு வேண்டுதல் பூஜை, தீச்சட்டி ஏந்து வைபவம் நடைபெற்று பிற்பகல் 1200 மணிக்கு மகேஸ்வர பூஜையும் 1.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

உள்ளூர் மக்கள் ,வெளி மாநிலங்கள், மற்றும் லண்டன், சீங்கப்பூரிலிருந்து அதிகமான பக்தர்கள் ஆலயத் திருவிழாவில் ஆண்டு தோரும் கலந்துக் கொள்வார்கள் எனவும் வருகைப் புரியும் அனைவருக்கும் ஆலயத் தொண்டுழியர்கள் வாழை இலை போட்டு உணவு பறிமாறுவது இவ்வாலயத்தின் தனி சிறப்பாக விளங்குகிறது.

வருடாந்திர திருவிழாவில் அனைவரும் வந்து கலந்துக் கொள்ளுமாறு ஆலயத் தலைவர் க. மகாலிங்கம் சாஸ்திரிகள் அன்புடன் கேட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு : 012-6276337,016-383 7218/ 0102712736

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here