நமது நிருபர் கவின்மலர்,
ஜார்ஜ்டவுன்:
கடந்த 2023 ஆம் ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 7ஏக்கு மேல் பெற்ற 158 இந்து மாணவர்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஊக்குவிப்பு நிதி வழங்கும் என்று அதன் கல்விக் குழுத் தலைவரும் மேலவை உறுப்பினருமான டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தைத் தாங்கள் அறிவித்துள்ளதாக அவர் சொன்னார்.
நமது மாணவர்கள் உயர்கல்விக் கூடங்களில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பது நமது நோக்கமாகும்.அதுபோலவே பட்டக்கல்வி பட்டயக் கல்வியைத் தொடங்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இந்து மாணவர்களுக்கும் நிதி உதவிகளை நாங்கள் செய்கிறோம் என்று அவர் சொன்னார்.
எதிர்வரும் 30.6.2024 ஆம் தேதி பெருநிலத்தில் தேர்வு பெற்ற 100 மாணவர்களுக்கான இந்நிதி நிபோங் தெபால் சி-மார்ட் பேரங்காடி வளாக அரங்கத்தில் வழங்கப்படும். அது போலவே தீவிலுள்ள மாணவர்களுக்கும் கொம்பத்தார் ஆடிட்டோரியத்தில் வழங்கப்படும் எனவும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என்.ராயர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளுக்கான அழைப்பட்டைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.