மஇகாவின் 21 மத்திய செயலவை பதவிகளுக்கு 45 பேர் போட்டி

கோலாலம்பூர்:

மஇகாவின் 21 மத்திய செயலவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட இம்முறை 45 பேர் வேட்புமனு சமர்ப்பித்தனர்.

மஇகா உயர்மட்டப்பதவிகளுக்கான வேட்புமனு சமர்பிப்பு கட்சி தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்றது.

கட்சி தேசியத் தலைவரும் தேர்தல் குழு தலைவருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இந்த வேட்புமனு சமர்ப்பிபை வழி நடத்தி பின் முடிவுகளை அறிவித்தார்.

21 மத்திய செயலவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு 45 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

குறிப்பாக ஏற்கெனவே இந்த பதவிகளை வகித்து வந்தவர்களும் புதிய முகங்களும் இம்முறை களம் இறங்கியுள்ளனர்.

அதிலும் கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கே.ரவின்குமார், அதன் முன்னாள் துணைத்தலைவர் அண்ட்ரூ டேவிட் ஆகியோரும் இம்முறை மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு மனுதாக்கல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here