ஜப்பானின் ஃபுஜி மலையில் ஏறுவதற்குப் புதிய கட்டணம்

ஜப்பானின் ஆக உயரமான சிகரத்தைக் கொண்ட ஃபுஜி (Fuji) மலையேறும் பருவம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அதில் சில முக்கிய மாற்றங்களை அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர்.

இப்போது மலையேறுவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும். நாளுக்கு 4,000 பேர் மட்டுமே மலையேற முடியும் என்ற வரம்பும் விதிக்கப்பட்டுள்ளது.
ஃபுஜி மலையை ஏறப் பலரும் பயன்படுத்தும் பாதையில் கூட்டநெரிசலைக் குறைக்க ஜப்பானிய அதிகாரிகள் புதிய நடவடிக்கைகளை அறிவித்தனர்.

கோவிட் காலத்துக்குப் பிறகு சுற்றுப்பயணிகள் அங்குப் பெருந்திரளாகச் செல்வதால் சுற்றுப்புறத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைப் பற்றி அதிகாரிகள் அக்கறை தெரிவித்தனர். ஃபுஜி மலை அமைந்திருக்கும் யாமானாஷி (Yamanashi) வட்டாரத்தின் ஆளுநர் மலையேற்றத்துக்குச் செலுத்தவேண்டிய புதிய கட்டணத்தைத் தற்காத்துப் பேசினார்.

ஜப்பான் பெரிய எண்ணிக்கையில் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக அங்கு அதிகச் செலவு செய்யக்கூடியோரை ஈர்ப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here