மறைந்த இளவரசி டயனாவின் உடைமைகளுக்கு இவ்வளவு மதிப்பா?

மறைந்த இளவரசி டயானாவின் உடைமைகள் எதிர்பார்த்தத் தொகையைவிட அதிகமான விலையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவை மொத்தம் 5.5 மில்லியன் டாலருக்கு (சுமார் 7.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) விற்பனையானதாக CNN செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

50க்கும் அதிகமான பொருள்கள் Julien’s Auctions நிறுவனம் நடத்திய ஏலத்தில் விடப்பட்டன. இளவரசியின் சட்டைகள், தொப்பிகள், காலணிகள், கைப்பைகள், புகைப்படங்கள், தனிப்பட்டக் கடிதங்கள் ஆகியவை ஏலத்தில் இடம்பெற்றன. பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ராணி விக்டோரியா, இளவரசி மார்கரெட் போன்றோரின் பொருள்களும் ஏலத்தில் இடம்பெற்றன.

இளவரசி டயனா 2 முறை அணிந்த சட்டை ஒன்று ஆக அதிகமான விலையான 910,000 டாலருக்கு (சுமார் 4.8 மில்லியன் ரிங்கிட்) விற்பனையானது. இளவரசி டயனாவின் பச்சை நிறக் காலணி ஒன்று 390,000 டாலருக்கு (சுமார் 200,0000 மலேசிய ரிங்கிட்) விற்பனையானது. அது 2,000 டாலரிலிருந்து 4,000 டாலருக்குத்தான் ஏலத்தில் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here