சபா வெள்ளம் : 450 க்கு மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோத்தா கினாபாலு:

பாவில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி அங்குள்ள நான்கு தற்காலிக வெளியேற்ற மையங்களில் மொத்தம் 140 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் தங்கியுள்ளனர். அதேநேரம் நேற்று இந்த எண்ணிக்கை 105 குடும்பங்களைச் சேர்ந்த 328 பேராக இருந்தது.

இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று, சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here