கோலாலம்பூர்:
அண்மையில்ச மூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட tiktok பிரபலம் ஈஷாவின் மரணம் தொடர்பில், ஏற்கனவே ஒரு பெண் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று ஒருவன் தானாகவே முன்வந்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்தான்.
இணைய பகடிவடை மூலம் ஈஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக நம்பப்படும் பலரில், 40 வயது மதிக்கத்தக்க இந்த ஆடவனும் அடங்குவதாக நம்பப்படுகிறது.
Dulal Brothers என அழைக்கப்பட்ட அந்த ஆடவன், நேற்று மாலை அருகிலுள்ள காவல்நிலையத்தில் சரணடைந்தான், அதன் பின்னர் செந்தூல் போலீசார் அவனைக் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலை செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அஹ்மாட் சுகர்னோ முகமட் ஜஹாரி உறுதிப்படுத்தினார்.




















