கோலாலம்பூர்:
உலு சிலாங்கூரில் உள்ள கம்போங் ஸ்ரீ கிளெடாங்கில் 25 வயதான நூர் ஃபாரா கர்தினி அப்துல்லாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு, இன்று காலை தேசிய காவல்துறையின் (PDRM) டைவ் பிரிவையும் K9 பிரிவான மோப்ப நாய் பிரிவினரையும் தடயங்களை கண்டறியும் நோக்கத்தில் அனுப்புகிறது.
செம்பனைத்பனை தோட்டத்தை ஒட்டியுள்ள அகழிக்கு அருகில் காலை 9 மணியளவில் சாட்சியங்களை மீட்கும் பணி தொடங்கும் என்று உலு சிலாங்கூர் காவல்துறையின் துணைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் கூறினார்.
“பாதிக்கப்பட்ட பெண்ணின் ஸ்மார்ட்போன், நெக்லஸ் மற்றும் இந்த வழக்கில் ஆதாரம் மற்றும் தடயங்கள் என்று நம்பப்படும் பல பொருட்களை நாங்கள் தேடுவோம்,” என்று அவர் சொன்னார்.
நூர் ஃபரா கர்தினியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரது காதலர் என நம்பப்படும் போலீஸ் லான்ஸ் கார்ப்ரல் தரத்தில் உள்ள ஒரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டு, நேற்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.