கோத்தா பாரு:
கோத்தா பாரு-குவா முசாங் சாலையில் உள்ள KM104 இல் நேற்று திங்கள்கிழமை (ஜனவரி 27) MPV வாகனமும் பேருந்தும் மோதிய விபத்தில் MPV வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கோலக் கிராய் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மஸ்லான் மாமட் கூறினார்.
56 வயது நபர் ஓட்டிச் சென்ற MPV, கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்து, பேருந்து மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.
பாதிக்கப்பட்ட MPV ஓட்டுநர் “சுங்கை சாமில் இருந்து கோலக் கிராய் நோக்கிச் சென்று கொண்டிருந்தார் என்றும், மோதலின் விளைவாக, அவர் பலத்த காயமடைந்ததாகவும், பின்னர் கோலக் கிராய், சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாகவும் அவர் அவர் கூறினார்.
இந்நிலையில், பேருந்து ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், கவனக்குறைவாகவோ அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.






















