இன்று இரவு 8.30-9.30 வரை மெனாரா கோலாலம்பூர் (KL tower) ரஷ்யாவின் தேசிய தினத்தை பிரதிபலித்து அதன் தேசியக்கொடியின் நிறத்தில் ஒளிர்கிறது

கோலாலம்பூர் (ஜூன் 12) : ரஷ்யாவின் தேசிய தினத்தை முன்னிட்டு இன்று இரவு ரஷிய தேசியக் கொடியின் வண்ணங்களில் உலகின் ஏழாவது உயரமான தொலைதொடர்பு கோபுரமான மெனாரா கோலாலம்பூர்(KL Tower) ஒளிரும் என்று மலேசியாவிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு மலேசிய நேரம் 8.30 மணி முதல் 9.30 மணி வரை ரஷ்ய தேசியக்கொடியின் வண்ணங்களை கே.எல். கோபுரத்தில் கண்டு களிக்க முடியும் என்றும் கூறியது.

“இது நமது நாட்டின் நவீன வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நாளாக அமையும் என்றும் ஜனநாயக மற்றும் பொருளாதார மாற்றங்களை அடையாளப்படுத்துவதாகவும் அமையும் என்றும் நம்பப்படுகின்றது. எவ்வாறாயினும், தற்போது மலேசியாவில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவு இத்தகைய கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“ரஷ்யாவின் தேசியக் கொடியைக் குறிக்கும் வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு விளக்குகளில் அலங்கரிக்கப்பட்ட உலகின் 7 வது மிக உயரமான தகவல் தொடர்பு கோபுரமான மெனாரா கோலாலம்பூரைப் பார்ப்பது, ரஷ்ய மொழி பேசும் மலேசியாவின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு அற்புதமான பரிசாக இருக்கும் என்று  அது தெரிவித்தது.

மேலும் “இந்த எளிய நடவடிக்கை இந்த நாட்டில் ரஷ்ய மொழி பேசும் சமூகத்திற்கு ஒரு நினைவூட்டலாக அமையும் அத்தோடு அவர்கள் மலேசியர்களது விருந்தோம்பும் பண்பினையும் மற்றும்  மலேசிய சமூகத்தின் ஆதரவினையும் பெற்றிருக்கின்றார்கள் என்பதுடன் அவர்களுடன் மலேசியர்களும் தங்களது தேசிய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சாதனை நீண்டகாலமாக நினைவுகூரப்படும் என்றும் மலேசியா மற்றும் ரஷ்யா மக்களிடையே நட்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்த பெரிதும் உதவும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

மலேசியாவில் தற்போது சுமார் 300 ரஷ்ய குடிமக்கள் உள்ளனர் என்பதுடன் நாட்டில் சுமார் 2,000 ரஷ்ய மொழி பேசும் மக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here