நாட்டில் 3.1 விழுக்காடு முதியவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்; வெளியான அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர்:

நாட்டில் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட முதியவர்களில் 3.1 விழுக்காட்டினர் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் ஜுல்கிஃப்லி அமாட் தெரிவித்துள்ளார்.

இந்த தரவு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய உடல்நலம் மற்றும் நோயுற்ற தரவுகள் அடிப்படையில் நடந்த ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது முழு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அவர்கள் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளவது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

வயதாகும்போது, ​​பலவீனம் முதல் டிமென்ஷியா போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே, நம்மைச் சுற்றியுள்ள முதியவர்களுக்கு நேர்மறையான மன ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here