இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ஏமாந்த பெண்: RM39,000 பறிபோனது!

கோலாலம்பூர், பிப் 6:

சமூக ஊடகப் பிரபலம் (Influencer) ஒருவரின் பரிந்துரையின் பேரில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட 37 வயது சிங்கப்பூர் பெண்மணி, RM39,000 இழந்து உடல்நலப் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வழக்கறிஞர் யாப் வாய் ஷான் கூறுகையில், “தகுதியற்ற நபர்களால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய மீண்டும் ஒரு லேசர் சிகிச்சை தேவைப்படுகிறது,” என்றார்.

இது குறித்து MCA பொதுச் சேவைகள் மற்றும் புகார்கள் துறை மூலம் சுகாதார அமைச்சிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முறையான உரிமம் இல்லாத மருத்துவ மையங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here