17 மணி நேரம் சட்டசபைக் கூட்டம்: தெலுங்கானா சாதனை

திருப்பதி: தெலுங்கானா சட்டசபைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 31ஆம் தேதிக்குள் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. மின்சாரம், நகராட்சி நிர்வாகம், உள்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பான கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

இதனால் காலையில் தொடங்கிய சட்டசபை கூட்டம் இரவிலும் நீடித்தது. தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் செய்ததால் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை சட்டசபைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 19 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து 17 மணி நேரம் சட்டசபைக் கூட்டம் நடத்தப்பட்டது சாதனையாக அமைந்தது. இந்தக் கூட்டத்தில் 70 விழுக்காட்டுக்கு அதிகமான எம்.எல். ஏ.க்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் நடுவில் உறுப்பினர்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டிருந்தது.

என்.டி.ராமராவ் ஒருங்கிணைந்த ஆந்திராவில் என்.டி. ராமராவ் முதல் அமைச்சராக இருந்தபோது ஒருமுறை அதிகாலை 2 மணி வரை சட்ட சபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதேபோல் சந்திரசேகர ராவ் ஆட்சியில் 2 முறை நள்ளிரவு 1 மணி வரை தெலுங்கானா சட்டசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here