புவனேஸ்வர்: கல்யாண மன்னன் குறித்த விசாரணையில், போலீஸார் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.. இது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒடிசாவை சேர்ந்தவர் சத்யஜித் மனகோவிந்த் சமால்.. இவருக்கு 34 வயதாகிறது.. இவர் இதுவரையில் 5 பெண்களை திருமணம் செய்துள்ளார்.. 50 பெண்களை காதலித்து ஏமாற்றி இருக்கிறாராம்.
நெருக்கம்: பெண்களிடம் நெருங்கி பழக வேண்டும் என்பதற்காகவே மேட்ரிமோனியல் வெப்சைட்டில் பதிவு செய்து, வரன் தேடுவார்.. இந்த website மூலமாகவே வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து, திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார். பெண்கள் அனைவரையுமே காதல் வலை விரித்து ஏமாற்றி, பணம், நகை சுருட்டி விடுவார்.. சில பெண்களிடம் உடனடியாக பணம், நகை பறிக்க முடியாவிட்டால், திருமணம் செய்து கொள்வாராம். அதற்கு பிறகே மோசடியில் இறங்கி, நகை, பணத்தை கிளம்பி விடுவார்.
பெண்கள்: இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவரால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் போலீசுக்கு போய் விட்டார்கள். தங்களை கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி, ரூ.45 லட்சம் வரையில் மோசடி செய்து விட்டதாக போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து, கல்யாண மன்னன் சமாலை பிடிக்க புவனேஸ்வர் போலீசார் ஸ்கெட்ச் போட்டனர்.. இதற்காகவே இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மணமகன் தேவைப்படுவதாக மேட்ரிமேனியில் விளம்பரம் தந்தார்கள். உடனே சலாம் இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டார். அந்த பெண் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சொன்னார்.
விசாரணை: இதையடுத்து, போலீசார் சமாலை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டனர். அதாவது பெண் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, துபாயிக்கு சென்று செட்டில் ஆகி விடலாம் என்று பிளான் போட்டு இருந்தாராம். அதற்குள் பொலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
இது குறித்து புவனேஸ்வர் போலீஸ சொன்னதாவது: மேட்ரிமோனியல் வெப்சைட்டில், 2ஆவது திருமணத்திற்காக வரன் தேடும் கணவனை இழந்த பெண்களை குறி வைத்து சமால் தனது சதித்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார். அவர்களை பேச்சால் மயக்கி பணம் மற்றும் கார், பைக் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களைப் பெற்று ஏமாற்றியிருக்கிறார். இப்போது, சமாலிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளோம். தொடர் விசாரணை நடக்கிறது. இவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் யார் யார்? நகை, பணம் எவ்வளவு மோசடி செய்தார் என்று விசாரித்து வருகிறோம் என்றனர்.