கெடா:
கெடா சுல்தான் வம்சாவளியை டிக்டோக்கில் இழிவுப்படுத்திய ஆடவர் ஒருவருக்கு ஒரு மாதச் சிறையும் 4,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
நோர் இஸ்மாயில் அம்ரான் கசிலா என்ற வேலையற்ற அந்நபர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 6ஆம் தேதி இரவு 10 மணியளவில், சுங்கை பட்டாணியில் அந்த நிந்தனை குற்றத்தை புரிந்ததை மாஜிஸ்திரேட் எம்.கலையரசிக்கு முன்னிலையில் அந்த ஆடவர் ஒப்புக் கொண்டார். “பிற மாநிலங்களின் வளங்களை கெடா மாநிலம் களவாடி விட்டது… என்று குறிப்பிட்டதோடு முன்னாள் சுல்தானையும் இழிவுப்படுத்தியிருந்தார்.
நான் அனாக் புக்கிட் அரண்மனை, கெடா சுல்தானுக்கு இதன் தொடர்பில் சவால் விடுக்கிறேன்” என்று அந்த டிக்டோக் பதிவில் அந்நபர் குறிப்பிட்டிருந்தார்.
இழிவு படுத்தும் நோக்கத்தில் தாம் அந்தக் கருத்தைப் பதிவு செய்யவில்லை என்றும் டிக்டோக்கில் தான் பதிவிட்ட கருத்தை ஆழித்து விட்டதால், அதான் தொடர்பில் எந்தவிதமான தண்டனையும் கிடைக்காது என்று கருதி இருந்ததாகவும் தனக்கான கருணை மனுவில் நோர் இஸ்மாயில் குறிப்பிட்டிருந்தார்.