ஷா ஆலம்:
நான் பல தடவை மஇகா பொதுப் பேரவையை தொடங்கி வைத்திருக்கிறேன். ஆனால் முதல் தடவையாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை மிகச் சிறப்பாகவும் அனல் பறக்கக்கூடியதாகவும் இருந்தது என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.
அவருக்கு இந்த மண்டபத்தில் திரண்டிருக்கும் அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று அம்னோ தேசியத் தலைவருமான ஸாஹிட் அழைப்பு விடுத்தபோது பலத்த கரவொலி மண்டபத்தில் எதிரொலித்தது.
மஇகா அதன் 78 ஆவது பொதுப் பேரவையை நடத்துகிறது. அம்னோவுக்கும் 78 வயது தான். இதனால் இரண்டு கட்சிகளுக்கும் வயதாகிவிட்டது என்று தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள்.
நம்பரை வைத்து மதிப்பீடு செய்ய வேண்டாம். இப்போதுதான் இக்கட்சிகள் ஆரோக்கியமான முதிர்ச்சியுடன் வலிமை பெற்று வருகின்றன என்று ஸாஹிட் தெரிவித்தார்.




















