சிங்கப்பூர்:
ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை காட்சியகத்தில் இன்று (செப்டம்பர் 20), வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே புதிய ஐஃபோன் 16 விற்பனை தொடங்கியுள்ளது.
காலை 6.10 மணிக்கு கடை வாசலில் கிட்டத்தட்ட 110 பேர் வரிசையில் நின்றிருந்த நிலையில், காலை 8 மணிக்கு முதல் வாடிக்கையாளர் கடைக்குள் சென்றார்.
காலை 8.30 மணியளவில் ஏறக்குறைய 300 பேர் வரிசையில் காத்திருந்தனர்.
ஐஃபோன் 16, செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இத்தகைய முதல் திறன்பேசி இது என்பது சிறப்பிற்குரியது.
இந்த புதிய ஐஃபோர்ன் 16க்கான முன்பதிவை கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முதலே வாடிக்கையாளர்கள் செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 19 ) இரவிலிருந்தே வாடிக்கையாளர்கள் கடை வாசலில் கூடத் தொடங்கினர். பின்னர் கடை ஊழியர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று அதிகாலை 4 மணிக்கு மீண்டும் அவர்கள் அங்கு கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.