இலங்கையில் அதிபர் தேர்தல் வரலாறு காணாத வகையில் ஒரு புதிய கட்சியை ஆதரித்து ஒரு புதிய முகத்தை அதிபராக தெரிவு செய்திருக்கிறது.
JVP எனும் சுருக்கமான பெயரில் People’s Liberation Front என அழைக்கப்படும் ஒரு அமைப்பு ,1970களில் அதிகமான இளைஞர்களை இணைத்து அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதன்பின்னர் இந்த அமைப்பு அரசாங்கத்தால் அடக்கி ஒழிக்கப்ட்டது. இது இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கருப்பு பக்கமாகும்.
1983களில் ஜனநாயக வழியில் தமது பயணத்தை திருப்பிக் கொண்ட இந்த கட்சி படிப்படியாக வளர்ந்து தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் இன்று மாபெரும் வெற்றியை தனதாக்கியுள்ளது. ஊழலை எதிர்க்கும் கடுமையான கொள்கையுடன் இராணுவ கட்டுப்பாடுகளோடு வளர்ந்து நிற்கும் இந்த கட்சியின் தலைவரான அனுர திஸாநாயக்காவைத்தான் இலங்கை மக்கள் தமது புதிய அதிபராக இன்று தெரிவுசெய்துள்ளனர்.
இந்த ஆட்சி மாற்றம் இலங்கையின் முன்னைய அரசியல்வாதிகளுக்கு கடுமையான ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஆட்சி அமைவதற்கு முன்னரே ஊழலில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதை தடுப்பதற்காக இலங்கை விமான நிலையம் கடுமையான பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.



















