வீட்டில் உள்ள பிரிட்ஜில் 30 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்.. பெங்களூரில் பயங்கரம்

பெங்களூரில் வீட்டின் ரெப்ரிஜிரேட்டரில் இருந்து பெண்ணின் உடல் 30 துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் மல்லேஸ்வரம் வியாலிகாவல் [Vyalikaval] பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர்பு  போலீஸார் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து  போலீஸார்அங்கு சோதனை நடத்திய நிலையில் வீட்டில் ஆன் செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருந்த 165 லிட்டர் சிங்கிள் டோர் ரெப்ரிஜிரேட்டரில் மனித உடல் 30 துண்டங்களாகப் புழுக்கள் அரித்த நிலையில் இருந்துள்ளது. அது அந்த 1 பிஹெச்கே வீட்டில் வசித்து வந்த 29 வயது பெண்ணின் உடல் என்பது தெரியவந்துள்ளது. அந்த பெண் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் பெங்களூரில் வீடு எடுத்து மால் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்  என்று  போலீஸார்  தெரிவித்தனர்

அந்த பெண் வெகு நாட்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த போலீஸார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகள் பாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்துக்கு (FSL) சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் துண்டு தூண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here