ஓ.டி.டி.யில் வெளியாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?

டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் 24ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் வெளியான புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’. நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்திருந்தார். மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1980-களில் கிறிஸ்துவ தேவாலயத்தின் பாதுகாப்பிற்காக ஊருக்குள் அழைத்து வரப்படும் நாயகனை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில், பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் சிறப்புத் தோற்றத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.

ஓ.டி.டி.யில் வெளியாகும் “பள்ளிச்சட்டம்பி”

இந்த நிலையில், ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஜூலை 24ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here