குஜராத் மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஒத்துழைக்க மறுத்த 6 வயது சிறுமியை தனியார் பள்ளி தலைமையாசிரியர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தாகோத் [Dahod] மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்திலிருந்து புதைக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமியின் உடல் கடந்த வாரம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்ததாகத் தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். உயிரிழந்த சிறுமி படித்து வந்த பள்ளியின் பிரின்சிபல் தான் சிறுமியைத் தினமும் பள்ளிக்கு தனது காரில் அழைத்துச்செல்வார் என்று சிறுமியின் தாய் போலீசிடம் தெரிவித்தார். எனவே 55 வயதான பள்ளி பிரின்சிபல் கோவிந்த் நாத் – யிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அன்றைய தினம் காலையில் தான் சிறுமியைப் பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு தான் வேறு ஒரு வெளியாகப் பள்ளியிலிருந்து சென்றதாகக் கூறியுள்ளார். கோவிந்த் நாத் அன்றைய தினம் சென்ற இடங்களை அவரின் போன் லொகேஷன் மூலம் போலீஸார் டிராக் செய்துள்ளனர்.
அவர் சிறுமியைப் பள்ளியில் இறக்கிவிட்டதாக சென்ற அன்றைய தினம் காலை பள்ளிக்கு தாமதமாகவே வந்தது தெரியவந்தது. இதை வைத்து பிரின்சிபலிடம் மீண்டும் விசாரித்ததில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று காலை சிறுமியை வீட்டிலிருந்து காலை 10.20 மணிக்கு அழைத்துக்கொண்டு சென்றதாக சிறுமியின் தாய் தெரிவித்தார். ஆனால் சிறுமி பள்ளிக்கு வரவே இல்லை என்று ஆசிரியர்களும் சக மாணவர்களும் தெரிவித்தனர்.
சிறுமியை பள்ளிக்கு செல்லும் வழியில் தான் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அதற்கு சிறுமி ஒத்துழைக்காமல் கத்தியதால் கழுத்தை நிறுத்து கொலை செய்தேன் என்று பிரின்சிபல் வாக்குமூலம் அளித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் உடலை தனது காரில் வைத்து பூட்டிவிட்டு மாலை 5 மணியளவில் பள்ளிக் சட்டத்துக்கு பின்னால் சிறுமியை புதைத்தாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பிரின்சிபலை போலீஸ் கைது செய்தது.