நவராத்திரிக்கு முன் வீட்டில் இருந்து அகற்ற வேண்டிய பொருட்கள்

அம்பிகையை வீட்டிற்கு அழைத்து, அவளின் அருளை நவராத்திரி காலத்தில் பெறுவதற்கு முன்பு, வீட்டில் துரதிஷ்டத்தையும், எதிர்மறை ஆற்றல்களைகளை ஈர்க்கக் கூடிய சில குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் இருந்த அகற்றுவது மிக முக்கியமானதாகும். நவராத்திரி கொண்டாட்டத்திற்கு முன் வீட்டில் இருந்து அகற்ற வேண்டிய பொருட்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, அக்டோபர் 12ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி விழாவின் முதல் நாள் வழிபாட்டினை வழிபாட்டினை அக்டோபர் 03ம் தேதி வியாழக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு துவங்க வேண்டும். அக்டோபர் 02ம் தேதி மகாளய அமாவாசை என்பதால் அன்று வீட்டை சுத்தம் செய்ய முடியாது. அதனால் செப்டம்பர் 30 அல்லது அக்டோபர் 01ம் தேதி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது கண்டிப்பாக வீட்டில் இருந்து வெளியேற்றி விட வேண்டிய பொருட்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

* உடைந்த பொருட்கள் – வீட்டில் இருக்கும் உடைந்த அல்லது சேதமடைந்த பொருட்கள் துரதிஷ்டத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை. இதனால் பழுதான, உடைந்த பொருட்கள் அல்லது சேதமடைந்த பொருட்களை முடிந்த அளவிற்கு சரி செய்து, நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதாக மாற்ற முயற்சி செய்யலாம். அப்படி முடியாத பட்சத்தில் அவைகளை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விடலாம்.

* படங்கள் – எதிர்மறை ஆற்றல்களை கொண்ட ஓவியங்கள், படங்கள், குறிப்பாக வன்முறை, கவலை, மன வேதனை தரும் படங்களை வீட்டில் இருந்து அகற்றி விடலாம். இவைகள் வீட்டில் எப்போதும் எதிர்மறையான, சோகமான சூழலையே உருவாக்கும்.

* பழைய துணிகள், செருப்புகள் – வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள், துரதிஷ்டம் ஆகியவற்றை வெளியேற்ற வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் பழைய துணிகள், பழைய செருப்புகள் ஆகியவற்றை தூக்கி எறிந்து விடுங்கள். நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பொருட்களை தானமாக கொடுத்து விடலாம்.

* காய்ந்த பூக்கள், செடிகள் – வீட்டில் காய்ந்து பட்டுப் போன நிலையில் இருக்கும் செடிகள், சாமி படங்களுக்கு போட்ட காய்ந்த பூக்கள் ஆகியவற்றை கண்டிப்பாக வீட்டில் இருந்து அகற்றி விட வேண்டும்.

* இறந்தவர்களின் படங்கள் – இறந்தவர்களின் படங்களை தனியாக ஒரு இடத்தில் தான் வைக்க வேண்டும். பூஜை அறையில் சுவாமி படங்களுடன் சேர்த்தோ அல்லது நடுக்கூடத்திலோ அல்லத வரவேற்பு அறையிலோ வைக்கக் கூடாது. இது வீட்டில் இறுக்கமான நிலையை ஏற்படத்தி விடும். அதுவும் பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியை தடுக்கும். அப்படி வைத்திருப்பவர்கள் இவற்றை வேற இடத்திற்கு மாற்றி விடுவது நல்லது.

* கூர்மையான பொருட்கள் – கத்தி, கத்திரிக்கோல், பிளேடு போன்ற கூர்மையான ஆயுதங்களை பல நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விடுங்கள். இவைகள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here