ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிழனுடன் டாக்டர் சத்யா பிரகாஷ் முக்கிய சந்திப்பு

சென்னை: தமிழ் நாட்டிற்கு அண்மையில் சிறப்பு வருகைப்பரிந்த உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர், கெஅடிலான் கட்சியின் தேசிய துணை செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் , மரியாதை நிமித்தமாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் எழிழனுடன் சந்திப்பு நடத்தினார்.

மலேசியா – இந்தியா இடையே தொப்புள் கொடி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருவரும் கலந்துரையாடினர்.கலை, கலாச்சாரத்தை தொடர்ந்து மேம்படுத்துவது தொடர்பிலும் பேசப்பட்டது.

மருத்துவத் துறையில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது.

 

இரு நாடுகள் இடையே வர்த்தகத்தை விரிவுபடுத்தி தொழில் வாய்ப்புகளை தொடர்பிலும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக டாக்டர் சத்யா பிரகாஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here