பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியான ‘சிட்டாடல்’ வெப் தொடர் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தது. இதன் முந்தைய பாகமாக ‘சிட்டாடல் ஹனி பன்னி’ தற்போது வெளியாகி இருக்கிறது.
மயோசிடிஸ் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ள சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பட விழாவில் சமந்தா கலந்து கொண்டு தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசினார்.சமந்தா பேசும்போது, “சிட்டாடல் உலகளவில் ரசிகர்களை கவர்ந்த வெப் தொடர். இதில் நானும் முக்கிய பங்கு வகித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரியங்கா சோப்ரா பெண்களுக்கு ஒரு சிறந்த ரோல் மாடல் ஆவார். அவர் நம்மை பெரியளவில் சிந்திக்கவும் தூண்டுகிறார். அவர் போன்ற அதிகார, ஆளுமைமிக்க பெண்களை சந்திப்பதும், பழகுவதும் அலாதி மகிழ்ச்சிக்குரியது.திறமைமிக்கவர்களுடன் பழகும்போது, நமது சவாலும் பெரிதாகி கொண்டு போகிறது. எனவே ஆளுமைமிக்கவர்களின் நட்பு சிறிது நேரம் கிடைத்தாலும் நல்லது. வாழ்க்கையில் சவால்கள் எப்போதுமே முக்கியமானது”, என்றார்.
சமந்தா தற்போது ‘தும்பத்’ என்ற இன்னொரு வெப் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.