நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து விவாகரத்து கோரி ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது.விசாரணைக்கு ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொலியில் ஆஜராகி இருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது.இன்றே இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.