நாட்டில் புதிய குரங்கம்மை தொற்றுப் பதிவு

கோலாலம்பூர்:

லேசியாவில் புதிய குரங்கம்மை நோய்தொற்று (mpox clade II) சம்பவம் ஒன்று கடந்த திங்களன்று பதிவாகியுள்ளது, இது நாட்டில் பதிவாகியுள்ள இரண்டாவது தொற்று நோய் சம்பவமாகும்.

நோய்த்தொற்றுக்குள் உள்ளான 34 வயதான மலேசியர், கடந்த 21 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார் என்றும், அவர் “தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையைப் பெற்றுள்ளார் மற்றும் தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது ” என்றும் அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த நோயாளி நவம்பர் 15 அன்று கைகள், உடல் மற்றும் கால்களில் சொறி உள்ளிட்ட அறிகுறிகளை பெற்றதாகவும், பின்னர் நவம்பர் 23 அன்று மருத்துவ சிகிச்சை பெற்றார் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

முன்னதாக செப்டம்பர் 16 அன்று, ஒரு mpox clade II சம்பவம் கண்டறியப்பட்டதை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here