கோலாலம்பூர்:
நாட்டில் தொடர்ந்த பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, 7 மாநிலங்கள் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளன, இந்நிலையில் இந்த வெள்ள நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் , ஏராளமானோர் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.30 நிலவரப்படி, கிளாந்தான், திரெங்கானு, கெடா, நெகிரி செம்பிலான், பெர்லிஸ், பேரா, சிலாங்கூர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22,966 குடும்பங்களைச் சேர்ந்த 74,173 பேர் அங்குள்ள 501 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் பிரிவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.