மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு, இன்று பள்ளிகள் திறப்பு

இம்பால்:

ணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு இன்று (நவம்பர் 29) முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி, குகி இனத்தவரிடையே கடந்தாண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. ஓராண்டுக்கு மேலாகியும் இரு தரப்பினரிடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், வடகிழக்குப் பகுதியில் நவம்பர் 11ஆம் தேதி இருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பெண்கள் மற்றும் 3 குழந்தைகளைக் கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்கக் கோரி மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் நவம்பர் 16ல் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்.

சட்டம்-ஒழுங்கு சீர்கெடுவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரின் பதற்றமான பகுதிகளில் நவம்பர் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இணையச் சேவை துண்டிக்கப்பட்டது.

இதற்கிடையில் நிலைமை சற்று மேம்பட்டுள்ளதால் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான அறிக்கையைப் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மத்தியப் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 29 முதல் தொடங்கும் என்று நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here