ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்தனர்.
ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தன.
இதனால், இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமரன் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 5-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.