கெமாமன்:
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாராங் மற்றும் கோலா திரெங்கானுவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை TNB தற்காலிகமாக துண்டித்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளாக மாராங்கில் உள்ள கெம் பஞ்சி அலாம், அத்துடன் விஸ்மா TG ராம்லி மற்றும் கோலா திரெங்கானுவில் உள்ள டெபோ ஆகியவை அடங்கும் என்று, TNB Careline ஃபேஸ்புக் பதிவில் கூறியது.
எனவே முடிந்தவரை “பொதுமக்கள் மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், மின்சார அதிர்ச்சியைத் தடுக்க மெயின் சுவிட்சை அணைத்து வைத்திருப்பதை உறுதி செய்யவும் நினைவூட்டப்படுகிறது.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, பொறுமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் அனைவரையும் TNB பெரிதும் பாராட்டுகிறது,” என்றும் இப்பதிவில் அதில் கூறப்பட்டுள்ளது.