வெள்ளம்; குபாங் பாசுவில் 9 சாலைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன

குபாங் பாசு:

வெள்ளம் காரணமாக குபாங் பாசுவில் உள்ள ஒன்பது சாலைகள் இன்னும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் மூன்று வழிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அங்கு பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்றும், அதனால் குறித்த சாலைகள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றவை என்பதால் இன்னமும் மூடப்பட்டுள்ளன என்று, குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ரெட்சுவான் சாலே கூறினார்.

மேலும் குறித்த ஒன்பது சாலைகளும் இன்னும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும், வெள்ளம் வடியும் வரை போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மூடப்பட்ட சாலைகள்: ஜாலான் தானா மேரா முதல் வாங் டெபஸ் வரை; ஜாலான் ஜித்ரா முதல் கம்போங் கெலுபி வரை; ஜாலான் ஹெட் படாஸ் முதல் புக்கிட் திங்கி வரை; ஜாலான் பத்து 9 ஜித்ரா முதல் அலோர் ரம்பாய்; ஜாலான் கம்போங் புடி முதல் கம்போங் போஹோர், ஜாலான் திதி பீசி முதல் கம்போங் பாசிர் (கனரக வாகனங்களுக்கு மட்டும் திறந்திருக்கும்); ஜாலான் ஹெட் படாஸ் முதல் திதி பீசி வரை (கனரக வாகனங்களுக்கு மட்டும் திறந்திருக்கும்); வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கிமீ 32.1 முதல் கிமீ 33.2 வரை தெற்கு நோக்கியும், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கிமீ 33.2 முதல் கிமீ 32.1 வரை வடக்கு நோக்கிய சாலையும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here