கோலாலம்பூர்:
நாட்டில் மாற்றுத்திறனாளிகளாக (OKU) பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட 290,000 ஐ எட்டியுள்ளது என்று டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை இதுவரை குறைந்தது 289,161 கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்கள் பதிவு செய்துள்ளனர், இந்த எண்ணிக்கை 2023 இல் 262,283 மாணவர்களாக இருந்து, தற்போது கணிசமான அளவு அதிகரிதுள்ளது என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் கூறினார்.
இவ்வாண்டு பதிவுகளின் இந்த கணிசமான அதிகரிப்பு, தங்கள் குழந்தைகளின் குறைபாடுகளின் அறிகுறிகளைப் பற்றிய பெற்றோரின் விழிப்புணர்வு மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
“எனவே இவ்வாறான மாணவர்களின் வளர்ச்சிக்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகள், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்ய, இந்த குழுவை பாதுகாக்கவும், ஆதரிக்கவும், அதிகாரம் அளிக்கவும் வலுவான கட்டமைப்பை அல்லது வழிகாட்டுதல்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும்” என்று, இன்று (டிசம்பர் 3 2024) தேசிய அளவிலான OKU தினத்தின் போது, அவர் ஒரு உரையில் கூறினார்.