விளக்கேற்றும் போது இதை மறக்காம பண்ணுங்க

வீடாக இருந்தாலும் சரி, கோவிலாக இருந்தாலும் சரி நாம் சாதாரணமாக செய்யப்படும் பிரார்த்தனையை விட, தெய்வத்தின் முன்பு விளக்கேற்றி வைத்து செய்யப்படும் பிரார்த்தனைக்கு ஆற்றல் அதிகம் என்பார்கள். நாம் ஏற்றும் விளக்கின் சுடரில், நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியவற்றை எழுந்தருளும் படி வேண்டிக் கொண்டு, விளக்கேற்றி, நாம் பிரார்த்தனை செய்யும் போது நம்முடைய வீட்டில் தெய்வம் எழுந்தருளி, நமக்கு நிச்சயம் அருள் செய்யும்.
நம்முடைய வேண்டுதலும் இதனால் விரைவில் நிறைவேறும்.நமது இல்லங்களில் அனைவரும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் நமது பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. இறைவனை ஜோதி வடிவமாக அல்லது ஒளி வடிவமாக வழிபடுவது இந்துக்களில் ஒரு விதமான வழிபாட்டு முறையாகும்.
நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வேண்டுதல், இறைவனிடம் வைக்க வேண்டிய கோரிக்கை என ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும். அந்த வேண்டுதல் விரைவில் நிறைவேற வேண்டும் என்றால் விளக்கேற்றும் போது என்ன செய்ய வேண்டும் என விளக்குகிறார் கோவில் அர்ச்சகரும் ஜோதிடருமான எம்.சிவராஜன் அவர்கள்.

காலையில் அதுவும் பிரம்ம முகூர்த்த வேளையில் வீட்டில் விளக்கேற்றி, மனம் கமழும் சாம்பிராணி போடுவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். பொதுவாகவே பிரம்ம முகூர்த்த வேளையில் நாள் செய்யும் வழிபாடு இரண்டு மடங்கு பலனை கொடுக்கும் என்பார்கள். இந்த சமயத்தில் மங்களகரமாக வாசல் தெளித்து, அரிசி மாவால் கோலமிட்டு, வீட்டின் நிலைவாசலிலும், பூஜை அறையிலும் விளக்கேற்றி வைப்பது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அழிப்பதுடன், தெய்வீக தன்மையை கொண்டு வரும்.வீட்டில் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் விளக்கேற்றி வழிபடலாம்.

பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கேற்ற முடியாவிட்டாலும் காலை 6 மணிக்கு முன்பாக விளக்கேற்றுவது நல்லது. பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரியால் விளக்கேற்றுவது நல்லது. ஒரு திரியால் விளக்கேற்றக் கூடாது. இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தான் விளக்கேற்ற வேண்டும். வீட்டில் நல்லெண்ணெய் அல்லது நெய்யால் விளக்கேற்றுவது சிறப்பு. இரண்டையும் கலந்து விளக்கேற்றக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here