டாக்கா:
இந்திய டி வி சேனல்களுக்கு தடை விதிக்கக் கோரி வங்கதேச உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் காலங்காலமாக சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இஸ்கான் கோயில் மீது தாக்குதல் நடந்தது. ஒரு இஸ்கான் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் இந்திய டிவி சேனல்கள் ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஜல்சா, ஜி பங்களா, ரிபப்ளிக் பங்களா உள்ளிட்ட பல்வேறு சேனல்களை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேனல்கள் வன்முறையை தூண்டும் வகையில் செய்திகள் பரப்பபுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.