அலோர் ஸ்டார்:
கெடாவில் வெள்ள நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது, இன்று காலை 8 மணி நிலவரப்படி, அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 6,268 ஆகக் குறைந்துள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட சிக் மாவட்டம் வெள்ளத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளது, அங்குள்ள இயங்கிவந்த இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் நேற்று மாலை மூடப்பட்டன.
கெடா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் சமீபத்திய தகவலின்படி, 1,902 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள நான்கு மாவட்டங்களில் இயங்கிவரும் 31 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.