திருவனந்தபுரம்;
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
போராட்டங்களுக்கு இடையே மீட்புப் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினாலும் நிலைமை இன்னமும் சீராகவில்லை. இந் நிலையில் புயலால் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.