கோத்தா கினாபாலு:
இன்று வியாழக்கிழமை (டிச. 5) அதிகாலை இங்குள்ள இனானம் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்டு வந்த மற்றொரு குற்றவாளியை போலீசார் இன்று சுட்டுக் கொன்றனர்.
59 வயதான சந்தேக நபர், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த மூன்று பேரின் கூட்டாளியாக இருப்பதாக நம்பப்படுகிறது, குறித்த மூவரும் முந்தைய நாள் இங்கு அருகில் உள்ள பெனாம்பாங் மாவட்டத்தில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்று,சபா சிஐடி தலைவர், துணை ஆணையர் டத்தோ அஸ்மி அப்துல் ரஹீம் கூறினார்.
இன்று அதிகாலை 2:30 தேடப்பட்டு வந்த சரவாக்கை சேர்ந்த அந்த ஆடவர், திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் என்றும், அதனைத் தொடர்ந்து, போலீசார் தற்காப்புக்காக மேற்கொண்ட பதில் துப்பாக்கிச் சூட்டில் குறித்த குற்றவாளி சுட்டுக் கொல்லப்படிடார் என்றும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமது தரப்பு மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.



















