கோத்தா பாரு:
சுங்கை நெங்கிரி மற்றும் சுங்கை கிளந்தான் ஆகிய பகுதிகளைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுமார் 19 கிராமங்கள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளி வரை வெள்ளத்தால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பினைத் தொடர்ந்து, வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் இந்த வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கணிக்கப்பட்ட வெள்ளம் எதிர்பார்த்ததை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படலாம் என்றும் JPS கூறியது. எனவே அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதையும், அதிகாரிகள் அல்லது பேரிடர் மேலாண்மை நிறுவனங்களின் அறிவுறுத்தல்களை கடைபிடிப்பதையும் உறுதிசெய்யும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியது.