காணாமல்போனதாக தேடப்பட்ட திலகவதி பாதுகாப்பாக உள்ளார் ;பெந்தோங் காவல்துறை

குவந்தான்:

டந்த நவம்பர் 30ம் தேதி பெந்தோங்கில் உள்ள காரக் பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் எஸ்.திலகவதி (41) தற்போது பாதுகாப்பாக உள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பேராக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அவர் விருப்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர், சைஹாம் முகமட் கஹர் கூறினார்.

அவரைக் கண்டுபிடிக்க உதவிய அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக டிசம்பர் 5 தேதியிட்ட ஊடக ஒளிபரப்பை பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியும் வரை பரப்பி ஒத்துழைத்த பெந்தோங் மக்களுக்கு நன்றி, ”என்று அவர் இன்று பெந்தோங் காவல்துறையின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.

கடந்த வியாழன் அன்று, திலகவதி காணாமல் போனது தொடர்பான புகாரை அவரது கணவரிடம் இருந்து போலீசார் பெற்றதாகவும், அது தொடர்பான தகவல்களை தெரிந்தவர்கள் போலீசை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் கடந்த 5 ஆம் தேதியன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here