கோலாலம்பூர்:
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை இணைய மோசடி வழி நாட்டிற்கு 1.224 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட் டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் நேற்றுக் கூறினார்.
இதில் இணைய மோசடி, தொலைத்தொடர்பு, மின் – நிதி நிர்வாகம், லவ் ஸ்கேம், மின் – வர்த்தகம் கடனுதவி, நடப்பில் இல்லாத முதலீடு ஆகியவை உள்ளடங்கும் என அவர் கூறினார்.

இணைய மோசடி இப்போது நாட்டில் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி வரை சமூக வலைத்தளக்களில் பதிவேற்றம் செய்திருந்த 62,833 படிமங்கள் அழிக்கப்பட்டதாக அவர் சொன்னார். வலைத்தளத்தில் இருந்து அகற்றப்பட்டதாகக் கூறிய அவர், இதில் 1,387 (71.2 விழுக்காடு) சிறார் வன்கொடுமை மீதான விவரங்களாகும் எனத் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான தொடர்பு, பல்லூடகச் சட்டதிருத்த மசோதாவை இரண்டாவது வாசிப்புக்காக மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் நிலவி வரும் நிதி மோசடி, ஏமாற்று வேலைகளைத் துடைத்தொழிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும்கூட இணைய மோசடி மீதான சம்பவங்கள் தொடர்ந்து நாட்டில் அதிகரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
இணையம் வழி நிதி மோசடி, ஏமாற்று வேலைகளைக் கையாள்வதற்கு குறிப்பிட்ட சில தரப்பினர் செயற்கை நுண்ணறிவு முறையை விரிவாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறிய அவர், இதனைக் கண்டறிவதற்கும் அடையாளம் காண்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளதாகக் கூறினார்.



















