ஈப்போ,
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு உதவ பேராக் ஜசெக தயாராக உள்ளது என அதன் தொடர்புக்குழு தலைவர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
அதிலும் பேராக்கில் நம்பிக்கை கூட்டணியுடனான கூட்டமைப்பை தொடர பாரிசான் முடிவெடுத்திருப்பது வரும் பொது தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் பலத்தை வெளிகாட்டும் அம்சமாக கருதப்படுகின்றது பேராக்கில் நம்பிக்கை கூட்டணி-பாரிசான் நேஷனல் கூட்டமைப்பு வைப்பதன் மூலம் இந்த மாநிலத்தை சிறப்பாக நிர்வாகம் செய்வது மட்டுமன்றி 2/3 தொகுதிகளையும் வென்றெடுக்க முடியும்.
அதிலும் வரும் பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற பேராக் பாரிசான் ஒருமித்த ஒப்புதல் வழங்கியுள்ளதாக டத்தோ ஷாம் மாட் சாஹாட் (பேராக் பாரிசான் பொருளாளர்) மூலம் கேள்வியுற்றது மகிழ்ச்சி தருகிறது.
எனவே நம்பிக்கை கூட்டணி மட்டுமல்லாது பாரிசான் நேஷனல் வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் ஜசெகவினர் மும்முரமாக செயலாற்ற வேண்டும்
ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய தொடர்ந்து கடுமையாக உழைப்பதுடன் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக 16ஆவது பொதுத் தேர்தலுக்கு ஜசெகவினர் தீவிரமாக தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற பேராக் ஜசெக ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.




















