பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா தனது 92ஆவது வயதில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு அவரது அரசியல் பணியைப் போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது





















