முழங்காலுக்கு மேல் ஷார்ட்ஸ் அணிந்த முதியவருக்கு பினாங்கு மருத்துவமனை அனுமதி மறுப்பு

ஜார்ஜ் டவுன்:

இங்குள்ள பொது மருத்துவமனை ஒன்றில் தனது மைத்துனரைப் பார்க்க முயன்ற மூத்த குடிமகன் தவறான வகை பேன்ட் அணிந்ததாக திருப்பி அனுப்பப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின.

72 வயதான லிம் தியன் ஹெங், திங்கட்கிழமை மதியம் செபராங் ஜெயா மருத்து வமனைக்கு வந்தபோது டி-சர்ட், முழங்காலுக்கு மேல் உயர்ந்த ஷார்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருந்தார்.

“என்னை அவர்கள் தடுத்தபோது, நான் திகைத்துப் போனேன் “ஷார்ட்ஸ் அணிவதில் என்ன பிரச்சனை” என்று பாதுகாவளராக பணியாற்றிய பெண்ணிடம் கேட்டேன். எனக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை, உள்ளே நுழைய தடை விதிக்கப் பட்டது, என்றார் ஓய்வுபெற்ற பொறியாளரான அந்த முதியவர்.

மருத்துவமனையின் பார்வையாளர் ஆடைக் குறியீடு குறித்த விளக்கப்படத்தைப் பார்க்குமாறு தன்னை பரிந்துரைதாக லிம் கூறினார்.

பின்னர் நான் மருத்துவமனையின் புகார் கவுண்டரில் இதுகுறித்து தெரிவித்தேன் , ஒரு அதிகாரி அவரிடம் தனது சலுகையை பயன்படுத்தி “இந்த ஒரு முறை” உள்ளே செல்ல அனுமதிப்பதாகக் கூறினார் என லிம் ஊடகமொன்றிற்கு கருத்து தெரி வித்துள்ளார்.

ஒரு முறை உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் என்னைத் தடுத்து நிறுத்திய அதே பாதுகாப்புப் பெண் என்னை உள்ளே செல்ல மறுத்தார். மேற்பார்வை யாளர் வரவழைக்கப்பட்ட பின்னரே அவள் வழிவிட்டார் என்கிறார் அவர்.

இது ஒரு குட்டி நெப்போலியனின் தீர்ப்பு. யார் இதை அமைத்தது? பொதுமக்களுக்கு இதுபோன்ற தீர்ப்பு வரக்கூடாது,” என்கிறார் லிம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here