கோலாலம்பூர்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) முதல் காணாமல் போனதாக தேடப்பட்ட சீன சுற்றுலாப் பயணி, MRR2 இல் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
84 வயதான Xu Baolin என்ற அந்த முதியவர், நேற்று புதன்கிழமை (டிசம்பர் 11) மாலை பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டார் என்று, டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் அபாண்டி சுலைமான் கூறினார்.