‘மலேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணி தொடர்பாக 25 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் – போலீஸ்

கோலாலம்பூர்:

லேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணியில் தொடர்புடைய 25 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்த்துள்ளனர்.

“தற்போதைக்கு, 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் விரைவில் தங்கள் வாக்குமூலங்களை வழங்க டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்ட அனைவரும் நாளை திங்கள்கிழமை (செப்டம்பர் 18) டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் காலை 10 மணிக்கு வந்து தங்கள் வாக்குமூலங்களை வழங்குவார்கள் என்று அவர் கூறினார்.

யாயாசன் அகல்புடியின் ஊழல் வழக்கில் (DNAA) டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளமுடியாது என நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோலாலம்பூரில் நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 16) நூற்றுக்கணக்கானோர் இணைந்து பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here