சித்தியவான் பாலத்தின் அடியில் சிக்கிய நால்வர் தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பாக மீட்பு

சித்தியவான்:

ன்று அதிகாலை ராஜா பெர்மைசூரி பைனுன் பாலத்தின் அடியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நால்வர், அங்கு திடீரென நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து பதட்டமான சூழலை எதிர்கொணடனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நள்ளிரவு 1.31 மணியளவில் தமது துறைக்கு அழைப்பு வந்தது என்று, பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.

​​மீட்புக் குழுவினர் சுங்கை மாஞ்சுங்கின் நீர்மட்டம் முழங்கால் அளவு மற்றும் வேகமாக உயர்ந்து வருவதைக் கண்டறிந்தனர் என்றும், படகை அனுப்பு பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு வயது பெண்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

மீட்கப்பட்ட நாலாவரும் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here