2018 முதல் POCA சட்டத்தின் கீழ் 6,176 பேர் தடுத்து வைப்பு – உள்துறை அமைச்சர்

கோலாலம்பூர்:

னவரி 1, 2018 முதல் இந்தாண்டு செப்டம்பர் 30 வரை குற்றத் தடுப்புச் சட்டம் (POCA) 1959 இன் கீழ் மொத்தம் 6,176 பேரை தேசிய காவல்துறை (PDRM) கைது செய்துள்ளது.

2018 முதல் 2022 வரையான காலப்பகுதியில் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் மலாய்க்காரர்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.

“இருப்பினும் 2023 மற்றும் 2024 க்கு, POCA 1959 இன் விளைவு ஏப்ரல் 2022 இல் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அதன் பின்னர் யாரும் கைது செய்யப்படுவதில்லை” என்று அவர் நேற்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார்.

POCA என்பது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், இரகசிய சமூகங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் ஒரு சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here