பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். இதற்கு முக்கியமான காரணம் தங்களுடைய அடிப்படை வசதிகளை மேலும் அதிகப்படுத்துவதற்காகவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் தான்.
பண வரவு அதிகரிக்காத சூழ்நிலையில் தேவைப்படக்கூடிய பணத்தை பெறுவதற்கு கடன் ஒன்றே வழியாக கருதி கடனை வாங்க ஆரம்பிப்பார்கள். சிறிதளவு வாங்கிய கடன் சிறுக சிறுக பெரியதாகி மலை போல மாறிவிடும். அந்த மலையை தகர்த்தெறிய முடியாமல் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் மார்கழி மாதத்தில் மகாலட்சுமி தாயாரை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கடன் பிரச்சனை தீர்க்கும் மகாலட்சுமி தீபம் தீபத்திற்கு பெயர் போன மாதமாக திகழக்கூடியது கார்த்திகை மாதம் என்றாலும் மார்கழி மாதத்தில் அனைவரின் இல்லங்களிலும் காலை நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கத்தான் செய்கிறது, அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் அதுவும் பெருமாளுக்கு அதீத சிறப்புகள் நிறைந்த மாதமாக திகழக்கூடிய இந்த மார்கழி மாதத்தில் மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் எந்த கடனாக இருந்தாலும் அந்த கடன் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.

மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான தீபம் என்றால் அது நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் தான். அதிலும் குறிப்பாக நெய் தீபம் என்பது மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான தீபம் என்று நம் அனைவருக்கும் தெரியும். வடக்கு பார்த்தவாறு ஒரு அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி மஞ்சள் நிற திரி அல்லது வெள்ளை நிற திரியைப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றிய பிறகு அந்த நெய்யில் ஒரே ஒரு ஏலக்காயை போட வேண்டும். இதுதான் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான தீபமாக கருதப்படுகிறது. மறுநாள் இந்த ஏலக்காயை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு அகல் விளக்கை சுத்தம் செய்து மறுபடியும் புதிதாக நெய் திரி போட்டு தீபமேற்றி ஒரு ஏலக்காயை போட வேண்டும். இப்படி மார்கழி மாதம் முழுவதும் நாம் தொடர்ச்சியாக ஏலக்காய் தீபம் ஏற்றி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்குரிய பணவரவை மகாலட்சுமி தாயார் அருள்வார் என்று கூறப்படுகிறது.
தினமும் ஒரு முழு ஏலக்காயை தீபத்தில் போட இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு ஏலக்காயை எடுத்து பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தில் ஒரு சிட்டிகை அளவு ஏலக்காய் தூளை சேர்த்தும் தீபம் ஏற்றலாம். முடிந்த அளவிற்கு முழு ஏலக்காயை போட்டு ஏற்ற முயற்சி செய்யுங்கள்.
இயலாதவர்கள் இந்த ஏலக்காய் தூள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் விளக்கை தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்று இல்லை. தீபம் எரிந்த பிறகு மீதம் இருக்கக்கூடிய நெய்யை மட்டும் சுத்தம் செய்து ஒரு பேப்பர் அல்லது துணியை வைத்து விளக்கை துடைத்து விட்டு புதிதாக நெய் திரி போட்டு ஏற்றிக் கொள்ளலாம். இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு மகாலட்சுமிக்கு பிடித்தமான பாடல்களை பாடி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் மனமகிழ்ந்து நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர்வதற்குரிய பணவரவை அருள்வார்.



















